கொரோனா தடுப்பு பணி; எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு பணிக்காக எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடியை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;

Update: 2020-04-07 10:42 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது.  ஊரடங்கை மதித்து, மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக, எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடியை மாநில அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்த முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதனால் மொத்த அவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.234 கோடியை கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.  இந்த நிதியை அந்தந்த தொகுதியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்