எளிய முதல்வர் என கூகுளில் தேடினால் முதல் அமைச்சர் பழனிசாமி பெயரே வரும்; அமைச்சர் உதயகுமார்

கூகுளில் எளிய முதல்வர் என தேடினால் முதல் அமைச்சர் பழனிசாமி பெயரே வரும் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2020-03-03 15:58 GMT
மதுரை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்தது.  இதில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசும்பொழுது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தொண்டர்கள் போன்று நாட்டில் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை.

முதல் அமைச்சர் பழனிசாமி பதவியேற்றபொழுது, இந்த ஆட்சி ஒரு வாரமே நிலைத்திருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறின.  ஆனால் அதனை தகர்த்தெறிந்து, இந்தியாவுக்கு வழிகாட்டியாக அவர் திகழ்ந்து வருகிறார்.

இந்திய அளவில் தமிழகம் சிறந்த முறையில் ஆட்சி செய்கிறது.  கூகுளில் எளிய முதல்வர் என தேடினால் முதல் அமைச்சர் பழனிசாமி பெயரே வரும்.  சிறப்புடன் நடைபெற்று வரும் தமிழக அரசை ஏற்று கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை.  இனி வரக்கூடிய எந்த தேர்தலாக இருப்பினும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்