வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை; அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு

கடலூரில் வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.;

Update: 2019-12-11 06:00 GMT
கடலூர்

வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

கடலூரில் மட்டும் கடந்த சில நாட்களாக மிக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.  கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. போட்டி காரணமாக வெங்காயம் கிலோ ரு.10க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்