டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 நிலையில், காலியாக இருந்த 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12 முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 441 பேர் எழுதிய நிலையில், அதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை tnpsc.gov.in மற்றும் tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே முதல்முறையாக தேர்வு நடைபெற்ற 145 நாட்களுக்குள் குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அதன் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.