“உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
சென்னை,
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான புதிய தேர்தல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், கமலுக்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.