"6 மாதங்களில் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும்" -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையை காண உலகில் இருந்து பல சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் மெரினா கடற்கரை அசுத்தமாகவும் குப்பையாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றவேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்து டிசம்பர் 13-க்குள் பதில் தர சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் எனவும், கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மெரினாவை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கை டிசம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.