‘இம்ப்காப்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் 9 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு குடிநீர் முகாம்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக வினியோகம்

டெங்கு காய்ச்சலை விரட்டவல்ல 9 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு குடிநீரை முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனம் வழங்குகிறது.

Update: 2019-11-20 23:36 GMT
சென்னை,

இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலை (இம்ப்காப்ஸ்) செயலாளர் டாக்டர் கே.பொன்சிங், துணைத்தலைவர் டாக்டர் எம்.சுரேஷ் ஆகியோர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வல்லது, நிலவேம்பு குடிநீர். நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி குடிப்பதல்ல. நிலவேம்பு, மிளகு, சுக்கு, சீந்தில்கொடி, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்ட பொடியை காய்ச்சி குடிப்பதாலேயே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.

அந்தவகையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் தயாரிக்க ஆசியாவிலேயே முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பன்மாநில கூட்டுறவு நிறுவனமான ‘இம்ப்காப்ஸ்’-ல் உள்ள நிலவேம்பு குடிநீர் (பவுடர்/சூரணம்) மிகுந்த பயனளிக்கும்.

இலவச முகாம்கள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2 தேக்கரண்டி நிலவேம்பு பொடியை 400 மி.லி. தண்ணீரில் கலந்து 150 மி.லி. அளவுக்கு சுண்ட காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 5 மி.லி.யும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 40 மி.லி.யும் வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும்.

காய்ச்சலுக்கு பின்னர் வரும் கை-கால்-மூட்டு வலிகள் போக்கும் வாத ஜூர குடிநீர், பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தும் கபசுரக் பொடியும் கிடைக்கிறது. தற்போது பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கும் முகாமை நடத்தி வருகிறோம். இந்த நிலவேம்பு குடிநீர் பொடி விற்பனைக்கும் உண்டு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்