“அரசியலில் எதுவும் நடக்கலாம் ” துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல அரசியல் கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன்.
நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம். யார் இணைந்தாலும், யார் பிரிந்தாலும் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். 58 கால்வாய் குறித்து கருணாநிதி ஆட்சியில் தவறான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.