உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் அ.தி.மு.க. - தி.மு.க.விடம் கூட்டணி கட்சிகள் தூது
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. - தி.மு.க.விடம் கூட்டணி கட்சிகள் ‘சீட்’ கேட்டு தூதுவிட்டு வருகின்றன.
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2016-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சி பதவிகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து. வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் பற்றிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
அதே நேரத்தில், இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் பணியில் கூடுதல் அலுவலர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. ஆனால், 3 ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்ததால், தேர்தல் ஆணையத்தை ஐகோர்ட்டு கடிந்துகொண்டது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதற்கிடையே, மத்திய அரசும் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தராமல் நிறுத்திக் கொண்டது. முறையாக தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகே நிதி ஒதுக்க முடியும் என்றும் கறாராக கூறிவிட்டது. இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் நிதி இல்லாமல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகின்றது. தேர்தல் தேதி இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
ஆளும் கட்சியான அ.தி. மு.க. கடந்த 15, 16-ந் தேதிகளில், தங்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி உள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க. கடந்த 14-ந் தேதி முதல் வரும் 20-ந் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்குகிறது.
அதேபோல், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான தே.மு. தி.க. 15-ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்குகிறது. மேலும், அதே கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் நேற்று முன்தினம் விருப்ப மனுக்களை வாங்கத் தொடங்கியது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை விரைவில் வாங்க உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் இன்னும் விருப்ப மனு தேதியை அறிவிக்கவில்லை.
இருந்தாலும், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போதே, ‘சீட்’ கேட்டு தூது விட்டு வருகின்றன. அதாவது, பா.ஜ.க. திருப்பூர், கோவை மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை அ.தி.மு.க.விடம் கேட்பதுடன் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளாட்சி அமைப்புகளில் இடம் கேட்கிறது.
அதே கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இரண்டை கேட்பதுடன் 10 சதவீத இடங்களையும் கேட்கிறது.
மேலும், பா.ம.க. வேலூர், சேலம், ஆவடி மாநகராட்சிகளை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், 15 சதவீத இடங்களையும், குறிப்பாக வட மாவட்டங்களில் இடங் களை கேட்டுவருகிறது. இதே கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி வேலூர் மாநகராட்சி மேயர் பதவியை கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். எனவே, இந்த முறை வெற்றிக்கனியை பறித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் கேட்டுவருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 15 முதல் 20 சதவீத இடங்களை கேட்டு வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மேயர் பதவிகளை கேட்பதுடன், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அங்கேயே அதிக இடங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அளவில் குறிப்பிட்ட இடங்களை கேட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தாலும், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் உறுதியாக எதுவும் தெரியாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ந் தேதி நடந்து முடிந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த பிறகே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் இரவே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லப்படுகிறது.