உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெற கூடுதல் நிர்வாகிகள் நியமனம் கட்சித் தலைமை அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெற கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-12 21:00 GMT
சென்னை, 

உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெற கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூடுதல் நிர்வாகிகள் நியமனம்

உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கட்சி தொண்டர்களிடம் இருந்து 15 மற்றும் 16-ந் தேதிகளில் விருப்ப மனு பெறப்பட இருக்கிறது. கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் விண்ணப்ப படிவங்களை பெறுவதற்காக ஏற்கனவே நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இப்போது அறிவிக்கப்படும் நிர்வாகிகளும் இணைந்து விருப்ப மனுக்களை பெறுவார்கள். மாவட்டம் மற்றும் நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

சென்னை - மதுரை

திருவண்ணாமலை தெற்கு - எஸ்.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்). அரியலூர் - ஆ.இளவரசன் (எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்). சேலம் புறநகர் - ஆர்.இளங்கோவன் (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர்). வடசென்னை தெற்கு - கே.எஸ். சீனிவாசன் (ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்).

மதுரை புறநகர் மேற்கு - மா.இளங்கோவன் (ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்), பா.வெற்றிவேல் (ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்). திண்டுக்கல் - ஆர்.வி.என்.கண்ணன் (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்), ஏ.சுப்புரத்தினம் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்). தென்சென்னை வடக்கு - எம்.கோவை சத்யன் (கட்சியின் செய்தி தொடர்பாளர்), டி.ரமேஷ் (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்), டி.சிவராஜ் (இலக்கிய அணி இணை செயலாளர்).

திருவள்ளூர் - காஞ்சீபுரம்

தென்சென்னை தெற்கு - வி.ஆர்.திருநாராயணன் (வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்), சி.பி.மூவேந்தன் (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்). காஞ்சீபுரம் மத்தியம் - க.பாலகுமார் (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்). காஞ்சீபுரம் கிழக்கு - பெரும்பாக்கம் இ.ராஜசேகர் (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்). திருப்பூர் மாநகர் - தி.க. அமுல்கந்தசாமி (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்).

திருவள்ளூர் கிழக்கு - குறளார் மு.கோபிநாதன் (கட்சியின் செய்தி தொடர்பாளர்), ஜி.கே.இன்பராஜ் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்). திருநெல்வேலி புறநகர் - எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கடலூர் கிழக்கு - சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை வடக்கு - எல்.ஜெயசுதா (மகளிர் அணி துணைச் செயலாளர்). கோவை மாநகர் - கோவை செல்வராஜ் (கட்சியின் செய்தி தொடர்பாளர்), சி.டி.சி. அ.அப்துல் ஜப்பார் (மாநில ஹஜ் குழு தலைவர்). கரூர் - ஏ.எம்.டி.இஸ்மாயில் (சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர்).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்