வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்

வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-19 07:44 GMT
மாமல்லபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு முன்பு கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.40 கட்டண வரம்பில் புதிதாக வெண்ணெய் உருண்டை பாறையும் வந்ததால் இலவசமாக இனி இதனை பார்க்க முடியாது.  

வெண்ணெய் உருண்டை பாறையை வெளிநாட்டவர் பார்க்க ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்