மாமல்லபுரம் வரும் இந்திய–சீன அதிகாரிகளுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு
மாமல்லபுரம் வரும் இந்திய–சீன அதிகாரிகளுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வர இன்னும் 2 நாட்களே உள்ளன. இதையடுத்து இந்தியா–சீன நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் தலைவர்கள் பார்வையிட இருக்கும் புராதன சின்னங்கள், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பகுதி, கடற்கரை கோவில் ஆகிய இடங்களை ஐந்து ரதம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நவீன கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு அதிகாரிகளின் முன்னும், பின்னும் யாரையும் வர விடாமல் பாதுகாப்பாக அழைத்து சென்று வருகிறார்கள்.