மின்சார ரெயில்களில் 12 பெட்டிகள் இணைக்க வேண்டும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம், தயாநிதிமாறன் எம்.பி. கோரிக்கை
மின்சார ரெயில்களில் 12 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், தயாநிதிமாறன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,
மின்சார ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நேரங்களில் இயக்கப்படும் பல மின்சார மற்றும் பறக்கும் ரெயில்களில் 9 பெட்டிகள் தான் உள்ளன. இதை 12 பெட்டிகளாக நீட்டித்தால் கூட்ட நெரிசலை குறைத்து மக்கள் சிரமம் இல்லாமல் இருக்க வழிவகை செய்யமுடியும். கூட்ட நெரிசல் அதிகமான நேரங்களில், 2½ நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் மின்சார ரெயில்கள் 15 நிமிடத்துக்கு ஒருமுறை தான் இயக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கூட்ட நெரிசலான நேரங்களில் மின்சார ரெயில்களை 7 நிமிடத்துக்கு ஒருமுறை இயக்கவேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் நகரும் படிகட்டுகள்(எஸ்கலேட்டர்) அமைக்க எம்.பி. நிதி ஒதுக்கியுள்ளேன். வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதைப்போல் சென்னையில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நகரும் படிகட்டுகள் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் சென்னையில் உள்ள அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களையும் அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன். எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதியவர்களை ஏற்றிச்செல்ல பயன்படும் பேட்டரி கார்களை இலவசமாக இயக்கவேண்டும். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரெயில் நிலையங்களில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் பல்வேறு ரெயில் நிலையங்கள் இருட்டில் உள்ளது.
இதனால் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பறக்கும் ரெயில் நிலையங்கள் அனைத்திலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மின்சார ரெயில் பெட்டிகளில் கதவுகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
ரெயில்களை தனியார்மயம் ஆக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். ரெயில்களை தனியார்மயம் ஆக்கினால் பலர் வேலை இழப்பார்கள். டிக்கெட் கட்டணங்களும் உயரும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். எனவே ரெயில்களை தனியார்மயம் ஆக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். தமிழகத்தின் பல்வேறு ரெயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்களில் தமிழ் தெரியாதவர்களே உள்ளனர்.
இதனால் பாமர மக்கள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே டிக்கெட் கவுண்ட்டர்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்தவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம். அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியசென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-