கட்டாய ஓய்வு கண்டித்து: நாடு முழுவதும் 15-ந்தேதி தர்ணா போராட்டம் - மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு
கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்து இருக்கிறது.
சென்னை,
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற உள்ள போராட்டம், வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்தக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
மத்திய அரசு ஊழியர்களின் 7-வது சம்பள கமிஷன் பிரச்சினையில் தீர்வு காணவேண்டும். அதேபோல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். இது எங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இதுதவிர மத்திய அரசின் நடவடிக்கைகளால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் 56 ஜெ சட்டப்பிரிவின் படி கட்டாய ஓய்வு அளிக்க முயற்சிக்கிறார்கள். இதை எந்த அரசும் செய்யவில்லை. அரசு ஊழியர்களை மிரட்டுவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
ரெயில்வே துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கிய அரசின் துறைகளில் தனியார் மயம் புகுத்தப்படுகிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மத்திய அரசு அலுவலகங்களை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்ததாரர்களை கொண்டு பணிபுரிய வைப்பது போன்றவற்றால் அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்படும்.
இதுபோன்ற மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மத்திய அரசு ஊழியர்கள் ரெயில்வேயைத்தவிர 33 லட்சம் பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்திலும் அன்றைய நாளில் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. இதுமட்டுமில்லாமல், அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 8-ந் தேதி வேலைநிறுத்தத்திலும் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-