தமிழ் பற்றி பேசியது அமெரிக்காவில் இன்னும் எதிரொலிப்பு: உலகின் பழமையான மொழி தமிழ் சென்னை ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.) 56-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.
சென்னை,
இதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழின் பெருமை பற்றி அமெரிக் காவில் பேசியதை குறிப்பிட்டார்.
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்து கொண்டு இருப்பதாக மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஐ.ஐ.டி. விழாவில் பேசும்போதும், உலகிலேயே பழமையான மொழியான தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம் என்று கூறினார். சமீபத்தில் ஐ.நா.வில் பேசும்போது, “தமிழ்மொழி பற்றியும் ‘யாதும் ஊரே’ என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற மோடி, இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உங்களை உருவாக்குவதற்கும், நீங்கள் பறக்க சிறகுகளை வழங்குவதற்கும் உங்கள் பெற்றோர் தியாகம் செய்துள்ளனர். கடுமையாக போராடியுள்ளனர். மாணவர்களை ஒரு சிறந்த என்ஜினீயர்களாக மட்டுமல்லாமல், சிறந்த குடி மகன்களாகவும் உருவாக்க ஆசிரியர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். மற்ற ஊழியர்களின் பங்களிப்பையும் நான் நினைவு கூறுகிறேன்.
உலகத்திலேயே மிகப்பழமை யான மொழியான தமிழ் மொழியின் தாயகமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவை, உலகம் தொழில் வாய்ப்புக்கான தேசமாக உற்றுநோக்குகிறது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள இந்தியர்களிடம் புதிய இந்தியாவைப் பற்றிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதை கண்டேன். இந்திய இளைஞர்கள் மீதும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
உலகம் முழுவதுமே இந்தியர்கள், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடையாளங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு காரணம் உங்களின் சீனியர்கள்தான். இந்தியாவை உலக அளவில் மேலும் சிறப்பாக்கியுள்ளனர்.
சிவில் சர்வீஸ் பணிகளில் உள்ள அதிகாரிகளிடம் சமீபத்தில் நான் கலந்துரையாடும்போது, ஐ.ஐ.டி.யின் பழைய மாணவர்களை என்னால் காண முடிந்தது. நீங்கள்தான் இந்தியாவை உலக அளவில் வலிமை பெறச் செய்கிறீர்கள். எதிர்காலத்தின் 3 முக்கிய தூண்கள் எதுவென்றால், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இணைந்து பணியாற்றுதல் ஆகியவைதான்.
5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளர வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. ஐ.ஐ.டி.யில் படித்து வருபவர்களும், இளைஞர்களும் இந்த இலக்கை இந்தியா எட்டுவதற்கு பெருமளவில் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வலுவான தளத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். புதிய நிறுவனங்களை அமைக்க இந்தியா நல்ல தளமாக விளங்குகிறது. இரண்டு மற்றும் மூன்றடுக்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில்கூட புதிய நிறுவனங்கள் வெற்றிகரமாக தொடங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்திய தயாரிப்புகளுக்கு உலகெங்கிலும் தனி இடம் கிடைக்க வேண்டும்.
வழியில் உள்ள தடைகளை உடைத்து பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். முன்னேற்றத்துக்கான கனவுகள் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு நீங்களே போட்டியாளராக இருங்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் தாய் நாட்டுக்கு என்ன தேவை என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.
இந்தியாவில் பல நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுமைத் தொழில்களுக்கு சந்தையைக் கண்டறிவதுதான் எங்களின் அடுத்த நடவடிக்கையாகும்.
உங்களின் கடுமையான உழைப்பு சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவை அனைத்தும் எளிதானவை அல்ல.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேற விரும்புகிறோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த அதே மாதிரி பயன்படுகின்ற ஆனால், அதேமாதிரி பாதகம் செய்யாததாக இருக்கும் பொருளை கண்டுபிடிப்பதில் உங்களைப் போன்றவர்களை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.
இந்தியாவுக்கு சேவை செய்வதே நல்ல தொழிலுக்கு உகந்ததாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்துத் தந்துள்ளது.
நமது வாழ்க்கை முறையால் வரவழைக்கும் நோய்கள்தான் நமக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. தொழில்நுட்பம் மூலமாகத்தான், இந்த சவால்களை எதிர்கொள்ளவும் அவற்றில் இருந்து தப்பவும் வழிவகுக்க வேண்டும்.
உங்கள் ஆரோக்கிய நிலையை நழுவவிட்டுவிடாதீர்கள். கட்டான உடல் மிகவும் அவசியம். ‘பிட் இந்தியா’ இயக்கத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். நல்ல தகுதிகளுடன் வாழ்க்கையை முழு அளவிலும் அனுபவியுங்கள்.
வாழ்க்கை என்பது உயிரோட்டமுள்ளதாகவும், தொலைநோக்கு உள்ளதாகவும் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை நமக்கானதாக மட்டுமல்லாமல், பிறருக்கானதாகவும் இருக்க வேண்டும். பட்டம் பெற்றதோடு ஒருவரின் கற்றல் நின்றுவிடாது. அது வாழ்நாள் முழுவதும் தொடரும் நிகழ்வாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி வரவேற்றார். ஐ.ஐ.டி.யின் வைர விழா தகவல் களை அவர் வெளியிட்டார்.
முன்னதாக, ஐ.ஐ.டி.யின் பதிவாளர் ஜேன் பிரசாத் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழா ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்கிரியால், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பங்கேற்று, பின்னர் விழா மேடையில் அமர்ந்தனர்.
ஐ.ஐ.டி. ஆட்சிக்குழு தலைவர் பவான் கோயங்கா, ஐ.ஐ.டி.யின் வளர்ச்சி குறித்து பேசினார். இந்த விழாவில் பத்தமடை பாயில் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் படம், நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற 2,140 பேரில், 1,359 மாணவ, மாணவிகள் நேரில் வந்து பட்டம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்களில் சிலருக்கு பிரதமர் நரேந்திர மோடி பதக்கமும், சான்றிதழும் வழங்கி கைகுலுக்கி வாழ்த்தினார்.
பி.டெக். மாணவி கவிதா கோபால், சென்னை ஐ.ஐ.டி.யின் 60 ஆண்டு கால வரலாற்றில் 3 பாடப்பிரிவுகளிலும் தங்கம் வென்ற முதல் மாணவியாக அறிவிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார்.
விழா மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது மாணவ, மாணவிகள் எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரித்து குரல் எழுப்பினார்கள். அதற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், பெற்றோருக்கும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம், பட்டம் பெற்ற மாணவர்கள் எழுந்து நின்று தன்னுடன் சேர்ந்து கைதட்டும்படியும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, மாணவர்கள் எழுந்து நின்று கைதட்டினர்.