ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம்
நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 19 நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.