சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே வாலிபர் படுகொலை ஓட, ஓட விரட்டி 6 பேர் கும்பல் வெறிச்செயல்
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 6 பேர் கும்பல் இந்த வெறிச்செயலை செய்தது.
சிவகங்கை,
சிவகங்கை அருகே உள்ள பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன். அவருடைய மகன் ராஜசேகரன் (வயது 35). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு பனங்காடி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, 2015-ம் ஆண்டு காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே பஸ்சில் தாய், மகனை வெட்டி கொலை செய்த வழக்கு, காளையார்கோவில் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
சாக்கோட்டை அருகே பஸ்சில் தாய்-மகன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்காக ராஜசேகரன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவரும் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த மற்றொரு ராஜசேகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அவர்கள் 2 பேரும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. இதை பார்த்த 2 பேரும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடினர்.
இதில் பனங்காடி ராஜசேகரன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஓடினார். அவரை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச்சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பனங்காடி ராஜசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.