நாங்குநேரியில் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் -கே.எஸ்.அழகிரி பேட்டி

நாங்குநேரியில் இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Update: 2019-09-06 11:34 GMT
நாங்குநேரி,

நாங்குநேரியில் நடைபெற்று வரும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பினார்.  

தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி  சில கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது.

குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற  முடியுமா? என நிர்வாகிகளை பார்த்து கேட்டார். தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர் அதனை மேலும் பலப்படுத்துவே இந்த கூட்டம். 

இவ்வாறு அவர் பேசினார். 

அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த  கே.எஸ்.அழகிரி நாங்குநேரியில்  நடைபெற்றது செயல்வீரர்கள் கூட்டம் அங்கு அவ்வாறு தான் பேச வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்