ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்கள்: போலீசார் விசாரணை

துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-05 13:35 GMT
நாமக்கல், 

முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போலவே ‘டிக்-டாக்’ என்ற பெயரில்  செல்போன் செயலி  ஒன்று உள்ளது. ஏற்கனவே இருக்கிற வீடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற ‘டிக்-டாக்’ செயலி கிட்டத்தட்ட ஸ்மார்ட் செல்போன் வைத்திருக்கும் அனைவரின் செயலிகளுடன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

இதற்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் ‘டிக்-டாக்’ செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நாமக்கல்லில், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ ஒன்று இளைஞர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவரை, 3 இளைஞர்கள் கத்தியை காட்டி வழிமறிப்பது போலவும், அதற்கு அந்த இளைஞர் துப்பாக்கியை நீட்டி சுடுவது போலவும் ‘டிக்-டாக்’ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆயுதங்களுடன் ‘டிக்-டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்