தெலுங்கானா கவர்னர் பதவி: தமிழிசைக்கு, பிரேமலதா நேரில் வாழ்த்து
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. வருகிற 8-ந்தேதி, தெலுங்கானா மாநில கவர்னராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
சென்னை,
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கட்சியின் மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோரும், தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.