பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே -திருநாவுக்கரசர்
பாஜக மாநில தலைவர் பதவியை ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.;
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
அதிமுக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பாஜக அரசை சந்தோஷப்படுத்தத்தான். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
பாஜகவில் உறுப்பினராக இல்லாதவர், அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்க முடியுமா? பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார், பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே என கூறினார்.