காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம்

காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-09-04 05:14 GMT
ஈரோடு,

பவானியை அடுத்த ஊராட்சிகோட்டையில் காவேரியின் குறுக்கே கட்டப்பட்ட கதவணை மின்  உற்பத்தி நிலையம் உள்ளது. அந்த மின் நிலைய முதல் ஷட்டரில் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது.

மின் நிலையத்தின் முதல் ஷட்டரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜீலை 22-ஆம் தேதி காவேரியின் குறுக்கே புதிதாக 3  கதவணைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்