போலீஸ்காரரை கைது செய்யக்கோரி கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த போலீஸ்காரரை கைது செய்யக்கோரி, கடலூரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கருப்புகொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் முத்தையாநகரை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 55). கண்டக்டரான இவர் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் பயணம் செய்த திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு பழனிவேல் டிக்கெட் எடுக்க மறுத்தார். இதையொட்டி அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென மயங்கி விழுந்த கண்டக்டர் கோபிநாத் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த போலீஸ் ஏட்டு பழனிவேலை கைது செய்யக் கோரியும் நேற்று கடலூரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கருப்புகொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு பஸ்களில் பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை நடுவழியிலேயே நிறுத்தியும், சிலர் சாலையோரமாக நிறுத்திவிட்டும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவித்தனர். பஸ்நிலையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.
போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கண்டக்டர் கோபிநாத்திடம் தகராறு செய்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.