ஆசிரியர்கள், தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

ஆசிரியர்கள், தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2019-09-03 15:44 GMT
சென்னை,

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் அரசு ஆசிரியர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,

அரசு பள்ளி "ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை பட்டியலிட வேண்டும்"  ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி, சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்