கூவம் ஆற்றில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;
சென்னை ,
சென்னை அடையாறில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூவம் ஆற்றில் குளித்துவிட்டு சாமி கும்பிடும் நிலை நிச்சயம் வரும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து பேசிய அவர், முதலீடுகளை ஈர்க்கவும், மக்களின் நலனுக்காகவுமே முதலமைச்சர் வெளிநாடு செல்வதாக குறிப்பிட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாகவும், இயற்கை இடர்பாடு வரும்போது அரசை பகையாளியாக பார்க்கும் எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டம் மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.