அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை
அத்திவரதரை தரிசிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க வரும் 17-ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 17-ஆம் தேதியான சனிக்கிழமை விடுமுறை தினம் என்ற நிலையில் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானக் கூடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே 7500 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் மேலும் 5000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அத்திவரதர் வைபவம் குறித்து அத்திகிரி என்ற புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட ஓபன்னீர் செல்வம் பெற்றார்.