கோவையில் கனமழை - பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு

கோவையில் கனமழை பெய்து வருவதால் பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-08-05 10:50 GMT
கோவை, 

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம், மலுமிச்சம்பட்டி, தொண்டாமுத்தூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து மாநகர பகுதிகளான சுந்தராபுரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து 6000 கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளதால், பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்