கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் நவீன தீக்காய சிறப்பு வார்டு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் தீக்காயத்திற் கான சிறப்பு வார்டு ரூ.2½ கோடியில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு விரைவில் திறக்கப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
சென்னை,
தென்னிந்தியாவிலேயே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் தீக்காயத்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தீக்காய தீவிர சிகிச்சை பிரிவில் நவீன முறையில் ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ எனப்படும் வரிச்சீர் காற்றோட்டம் முறையில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட உள்ளது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏஞ்சலின் செல்வராஜ் கூறியதாவது:-
தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நோய் தொற்று அதிகமானால் உயிர் பிழைப்பது மிக கடினம். இதற்காக தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ என்ற சிறப்பு வார்டு திறக்கப்பட உள்ளது.
இந்த ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ வார்டில் 9 படுக்கைகள் இருக்கும் அளவிற்கு இந்த வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை அரங்கில் சிகிச்சை முடிந்தவுடன், அவர்களை ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ வார்டில் தீவிர கண்காணிப்பு பிரிவில் தீக்காயங்கள் குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும். இங்கு சுத்திகரிக்கப்பட்ட காற்று ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பொருத்தப்பட்டிருக்கும்.
காற்றை சுத்திகரிக்க ‘ஹீப்பா சுத்திகரிப்பு’ எனப்படும் சுத்திகரிப்பான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் நோயாளிக்கும் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-
இந்த ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ ரூ.2½ கோடி செலவில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலே தீவிர சிகிச்சை பிரிவில் இந்த ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் தான் முதன் முதலாக கொண்டுவரப்படுகிறது.
50 சதவீதத்துக்கு அதிகமாக தீக்காயம் ஏற்பட்டவர்கள் அதிக அளவில் நோய் தொற்று தாக்கம் ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது. இந்த சிறப்பு வார்டு மூலம் இறப்பு விகிதம் கணிசமாக குறையும். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. ஆனால் இங்கு முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம். தற்போது இந்த ‘லாமினார் ஏர் புளோ சிஸ்டம்’ வார்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் இந்த வார்டு திறக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.