மூன்றாம் பாலினத்தினர்களுக்கு தனி செல்போன் செயலி: அமைச்சர் சரோஜா தகவல்

சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசினார்.

Update: 2019-07-10 18:33 GMT
சென்னை, 

சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசினார். பின்னர், துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:–

மூன்றாம் பாலினத்தினர்களுக்கான ஒரு தனி செல்போன் செயலி ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்படும். இச்செயலி மூலம் அனைத்து மூன்றாம் பாலினத்தினர்களுடைய வயது, முகவரி, கல்வித் தகுதி, பிற பயிற்சி பெற்ற விவரம் போன்ற விவரங்களின் பதிவு முழுமையாக மேற்கொள்ளப்படும்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தினரை சிறப்பிக்கும் வகையிலும், இதர மூன்றாம் பாலினத்தினர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும் மூன்றாம் பாலினத்தினருக்கான மாநில விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று ஆகியவை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்