ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்களை நியமிக்கவும், அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும், தமிழக வருவாய்த்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தார்.

Update: 2019-07-06 23:20 GMT
சென்னை, 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மறுநியமனத்திற்கு வயதுவரம்பு நிர்ணயிக்கப்படாதது, பணி விதிகளுக்கு முரணானது. அதனால், இந்த உத்தரவை ரத்து செய்து, காலியாக உள்ள 2 ஆயிரத்து 896 பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்