பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
துத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம். கோதாவரி - காவிரி இணைப்பிற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதிமுக ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.