பால் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு : அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு

சட்டசபையில் பால் வளம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

Update: 2019-07-05 23:15 GMT
சென்னை,

சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் பனீர், லஸ்சி, தயிர் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திருநெல்வேலி கூட்டுறவு ஒன்றியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் வசதி, 1.5 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி மேம்படுத்தப்படும். 

திருப்பூர் கூட்டுறவு ஒன்றியத்தில் விற்பனை அலுவலகம், மொத்த பால் குளிர்விப்பான் மற்றும் பால் குளிர்விப்பு அறைகள் நிறுவப்படும். 250 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.37.50 கோடி செலவில் அலுவலகக் கட்டிடம் கட்டித்தரப்படும். இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு கருணை ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து ரூ.4 ஆயிரமாகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1,750-லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்