நீதிபதியை மிரட்டியவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு : ஐகோர்ட்டு நோட்டீஸ்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோர்ட்டு நீதிபதி ஜெய்சங்கர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார்.

Update: 2019-07-02 21:54 GMT
சென்னை, 

செந்தில்குமார் என்பவர் தலைமையில் ஒரு கும்பல் கோர்ட்டுக்குள் அப்போது நுழைந்து, தங்கள் மனு மீது ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை? என்று கேள்வி கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர், நீதிபதியை இரும்பு கம்பியால் தாக்கவும் முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட வழக்கில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. பின்னர், நீதிபதியை பணி செய்ய விடாமல் தடுத்த செந்தில்குமார், வெங்கடேசன், ரகுபதி, ஜெய்வனூதீன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்