பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் -எடப்பாடி பழனிசாமி

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-07-02 07:17 GMT
சென்னை

தமிழக சட்டசபையில்  நீட் தேர்வு, 10% இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேசும்போது கூறியதாவது;-

நீட் தேர்வு தரவரிசைப்பட்டியல் திட்டமிட்டு தாமதம், இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது
என கூறினார். 

இதற்கு பதில் அளித்த முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து, கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகம் மட்டுமே கடைபிடிக்கிறது. 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்படும். இந்த விவகாரத்தில் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் வராது. 10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் சேர்ந்து நல்ல முடிவை எடுப்போம்  என கூறினார்.

மேலும் செய்திகள்