வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா அனந்தசரஸ் குளத்து நீரை வெளியேற்றும் பணி தொடக்கம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவுள்ள அத்திவரதர் விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

Update: 2019-06-08 19:47 GMT
சென்னை, 

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவுள்ள அத்திவரதர் விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாகன நிறுத்தும் இடம் அமைத்தல், கண்காட்சி அமைத்தல் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவையொட்டி அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக, வரதரின் கோடை வசந்த விழா தீர்த்தவாரிக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தின் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் செயல் அதிகாரி தியாகராஜன் தெரிவித்திருந்தார். தீர்த்தவாரி நிறைவு பெற்றதையடுத்து, குளத்தின் நீரை வெளியேற்றுவதற்கான மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டன. அனந்தசரஸ் குளத்து நீரை பொற்றாமரை குளத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்