மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 328 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்து வருகிறது.

Update: 2019-06-07 20:20 GMT
மேட்டூர், 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 259 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 328 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவானது, நீர்வரத்தை விட பலமடங்கு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் 45.86 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 45.74 அடியாக குறைந்தது.

மேலும் செய்திகள்