எளிய மாணவர்கள் மருத்துவ கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
எளிய மாணவர்கள் மருத்துவ கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வு என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது ‘நீட்’. மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு அதனை எப்போது காப்பாற்றும்?.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி,எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது நீட்!
— M.K.Stalin (@mkstalin) June 7, 2019
மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு அதனை எப்போது காப்பாற்றும்? pic.twitter.com/CXLFEXkrFv