நம்மை வடநாடு பின்பற்றுமாறு நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் - ப.சிதம்பரம்
நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-
தென்னாடு தான் இந்திய அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்றியுள்ளது. முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல், நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.