திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2019-06-06 22:00 GMT
திருவொற்றியூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 21). இவரும், பெரியபாளையம் வடமதுரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய மகள் சுவேதா(21) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

அங்குள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது நட்பாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் அறிந்த சுவேதாவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அஜித்குமார், சுவேதா இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஊத்துக்கோட்டையில் திருமணம் செய்துகொண்டனர்.

பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

பின்னர் அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுபற்றி புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரிக்கும்படி, திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று மாலை காதல் ஜோடியான அஜித்குமார், சுவேதா ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரது பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து உதவி கமிஷனர் வெற்றிசெழியன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சுவேதா, தனது காதல் கணவர் அஜித்குமாருடன்தான் செல்வேன் என்று உறுதியாக கூறினார்.

இதையடுத்து போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பின்னர் காதல் ஜோடி திருவொற்றியூரில் உள்ள அஜித்குமாரின் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்