இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : முதல்வர் பழனிசாமி

இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-06 14:14 GMT
சென்னை,

முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ் மொழியைப் பிற மாநிலத்தவர் பயில வேண்டும் என்றே கோரிக்கை வைத்தேன்; வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றே டுவிட்டரில் பதிவு செய்தேன். 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அரசு அனுப்பியுள்ளது. நளினியைத் தவிர 6 பேரையும் விடுவிக்கக் கூடாது எனக் கூறிய திமுகவிற்குக் கேள்வி கேட்க உரிமையில்லை

மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்?  தமிழைப் பிற மாநிலங்களில் பயிற்றுவிக்க வேண்டும் என்றுதான் டுவிட்டரில் பதிவிட்டேன். குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தன. நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகள் அளித்தன.

தண்ணீர் தட்டுப்பாடுகளைக் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்து மக்களுக்குத் தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்