அரசு ஊழியர்கள் உடை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு
அரசு அலுவலர்கள் நேர்த்தியான உடையை அணிந்து வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு இது குறித்து வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் வேட்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. வேஷ்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்.
டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.