நீலகிரி மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா 2,82,308 வாக்குகள் பெற்று முன்னிலை
நீலகிரி மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா 2,82,308 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
நீலகிரி,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த ஏப்ரல் 18ந்தேதி நடந்தது. இவற்றில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனை அடுத்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
நீலகிரி மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா 2 லட்சத்து 82 ஆயிரத்து 308 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன் 1 லட்சத்து 74 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார்.