கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசியது தொடர்பாக கமல்ஹாசன் மீது இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சட்டப்பிரிவு 295 ஏ, பிரிவு 153 ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.