18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணம் திமுகவும், தினகரனும் தான் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணம் திமுகவும், தினகரனும் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-05-11 15:02 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நாகமலைபுதுக்கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

பொய்களை கூறி மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. திமுகவிற்கும், அமமுகவிற்கும் தொடர்பு இருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி  உள்ளது. 

18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணம் திமுகவும், தினகரனும் தான்.  மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் சேர்ந்து மக்களிடம் நாடகம் நடத்தி வருகின்றனர். 

நாடகம் நடத்துவற்கு 2 பேருக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம். பெரிய தலைவர் போன்று தங்கதமிழ்ச்செல்வன் பேசி வருகிறார். மக்கள் கட்டளையை  நிறைவேற்றுவது தான் என் வேலை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்