பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-05-08 23:13 GMT
சென்னை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று ஏராளமானோரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவர்களது தாய்மார்கள் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விவரங்களை முறையாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் 4 வாரத்துக்குள் இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்