அனைத்து மாவட்டங்களிலும் பருவமழையின்போது வீணாகும் நீரை ஏரி, குளத்துக்கு கொண்டு செல்லுங்கள் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பருவமழை காலங்களில் வீணாகும் தண்ணீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு மாவட்டம் முருங்கதொழுவு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவி, கவுன்சிலர்கள் செந்தில், பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக முருங்கதொழுவு, கலிகவளசு மற்றும் புதுப்பாளையம் ஏரிகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. இதற்காக செலவாகும் நிதியை ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்க ஒப்புதல் அளித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டும் இதுவரை திட்டம் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த 3 கிராமங்களின் ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டுவர ரூ.23 லட்சம் செலவில் குழாய் பதிக்கவும், ரூ.12 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி மோட்டார் அமைக்கவும் என மொத்தம் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:-
தடுப்பணையில் வீணாகும் நீரை கிராமப்புற குட்டைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரசின் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இதே திட்டத்தை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி பருவமழை காலங்களில் வீணாகும் நீரை கிராமப்புற ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்தை 4 வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.