புயலை துல்லியமாக கணிக்க முடிந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது -இஸ்ரோ தலைவர் சிவன்
புயல் பற்றி துல்லியமாக கணிக்க முடிந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 9 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். செப்டம்பர் 6-ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. பானி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்துள்ளது. துல்லியமாக கணிக்க முடிந்ததால் உயிர்சேதம் உட்பட பெரிய பாதிப்புகள் இல்லாமல் பாதுகாக்க முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.