செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்:அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பெண்

செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்த முதியவரை பெண் ஒருவர் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-02 13:26 GMT
மதுரை,

மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த அரசியல் பெண் பிரமுகரின் செல்போனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் யாரென்று தெரியாததால் பெண் பிரமுகர் அழைப்பை துண்டித்துள்ளார். ஆனால் மர்ம நபர்  மீண்டும் மீண்டும் போன் செய்து  பாலியல் ரீதியாக அழைத்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதனை தனது கணவர் ராஜாவிடம் தெரிவித்த நிலையில் அந்த எண்ணில் இருந்து அழைக்கும் மர்ம நபரை போலீசில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார். அதனையடுத்து மர்ம நபரிடம் பேசிய பெண் பிரமுகர் அவரை சந்திக்க உசிலம்பட்டிக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். 

அங்கு,  அந்த நபரை  நடுரோட்டில் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்ட  நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவருடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா என  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்