சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுன்டர்

சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் சுட்டு கொலை;

Update: 2019-05-02 06:30 GMT
சேலம்


சேலம் மாநகரில் சமீபகாலமாக வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ரவுடிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன.

இதனால் அவர்களின் அட்டகாசத்தை தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சேலம் மாநகரில் கட்ந்த 26 ந்தேதி  ஒரேநாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.  அதன் தொடர்ச்சியாக பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கதிர்வேல் என்ற ரவுடியை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில்  சேலம்  மாவட்டம் காரிபட்டியில்   கதிர்வேல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் தனிப்படையினர் ரவுடி கதிர்வேலை  சுற்றி வளைத்தனர். அப்போது கதிர்வேல்  போலீசாரை தாக்க முற்பட்டு உள்ளார்.  இரு தரப்புக்கும் நடைபெற்ற மோதலில் போலீசார் என்கவுன்டரில்  கதிர்வேலை சுட்டுக்கொலை செய்தனர்.

மேலும் செய்திகள்