சக்கர நாற்காலியில் வந்து அன்பழகன் ஓட்டுப்போட்டார்
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் (96) வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் (96) வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பது இல்லை. இந்த நிலையில் தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இன்று அவர் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில் அவர் சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்கள் உதவியுடன் வாக்குப்பதிவு செய்தார்.